Breaking News

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு

மதுரை, மார்ச் 23-

பள்ளி, கல்லூரி அல்லது தொழில் துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20% இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



மதுரை திருமங் கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019 ஜனவரி 1ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. 

இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது. தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர் சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. ஜிழிறிஷிசியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியது, 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்பு, கல்வி அல்லது  கோரப்பட்டுள்ள தகுதி போன்ற முழு கல்வியையும் தமிழ் மொழியில் பயின்றவர்கள் மட்டுமே ஜிழிறிஷிசி-யில் தமிழ் வழியில் பயின்றதற்கான 20% இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20% வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும் தங்கள் உத்தரவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments

Thank you for your comments