Breaking News

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பு

 தர்மபுரி, மார்ச் 25-


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அ.ஆயிஷா மற்றும் பணியாளர்கள் உடனான குழுவினர் ஆய்வு செய்து முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூபாய் 2,200 அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும், அடிக்கடி கை கழுவுதல் போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


No comments

Thank you for your comments