Breaking News

மம்தாவுக்கு மே 2-ம் தேதி பிரியாவிடை

 கொல்கத்தா, மார்ச் 25-


மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மேற்கு வங்காளத்தில் மம்தா முடக்கிவிட்டார் என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி மேற்குவங்காள மாநிலம் கந்தியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-  எங்களை வெளி ஆட்கள் என்று முதல் -மந்திரி மம்தா வர்ணிக்கிறார். ஆனால் நாங்கள் வெளி ஆட்கள் அல்ல. நாங்களும் இந்தியர்கள்தான். உங்களோடு உங்களாக இருப்பவர்கள். மம்தா அரசியலில் நிறைய விளையாடுகிறார். அவரது விளையாட்டுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

மே 2-ந் தேதி மேற்கு வங்காளத்தில் உண்மையான மாற்றம் ஏற்படும். மம்தாவுக்கு அன்று பிரியாவிடை கொடுக்கப்படும். இதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள். மம்தாவைப் பற்றி இப்போது மக்கள் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார்கள். இனியும் அவர் ஏமாற்ற முடியாது. புதிய வாக்காளர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேற்கு வங்காளத்தின் எதிர்காலம் கருதி பா.ஜனதாவுக்கு ஓட்டு அளிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மேற்கு வங்காளத்தில் மம்தா முடக்கிவிட்டார். விவசாயிகளுக்கு நாங்கள் அளித்த நிவாரணங்களும் கிடைக்கவில்லை. பா.ஜனதா ஆட்சி இங்கு இப்போது அமையப்போகிறது. 3 ஆண்டுகளாக கிடைக்காத நிவாரணம் உங்களுக்கு உடனடியாக வழங்கப்படும். நாங்கள் மேற்கு வங்காளத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


No comments

Thank you for your comments