கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
![]() |
Delhi: President Ram Nath Kovind receives first dose of COVID19 vaccine at RR Hospital |
புதுடெல்லி, மார்ச் 3-
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் , மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அவரது மனைவி லட்சுமி பூரி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டனர்.
2021 ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் தயாரிக்கப்படுகிற கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டது.
முதல் கட்டமாக ஜனவரி 16ம் தேதி 1 கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன் களபணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடும் 45 முதல் 59 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
2வது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்நளான மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதனை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவர், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பீகார், ஒடிசா மாநில முதலமைச்சர்கள் ஆகியோரும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்கள்
மார்ச் 2ம் தேதி மூத்த மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை டுவிட்டரில் தெரிவித்த அவர்,“ தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது” என குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும், டாக்டர்களுக்கும் அவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டார்.
மத்திய சுகாதார அமைச்சர்கள் டாக்டர் ஹர்சவர்தன், டெல்லி இதயம் மற்றும் நுரையீரல் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றும் பல பிரபலங்களும் கொரோனா தடுபூசியை போட்டுகொண்டு தனது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இந்நிலையில் மூன்றாவது நாளான (மார்ச் 3ம் தேதி) இன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி ஜனாதிபதிக்கு செலுத்தப்பட்டது. தடுப்பூசியை செலுத்திக்கொண்ட குடியரசுத் தலைவர், தடுப்பூசிகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு தடுப்பூசி செலுத்தும்போது அவரது மகள் ஸ்வாதி கோவிந்த் உடனிருந்தார்.
இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிற முக்கியஸ்தர்களாவது,
![]() |
சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத் மற்றும் அவரது மனைவி இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை கேங்டோக்கிலுள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டனர்.
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஷில்லாங்கில் செலுத்திக் கொண்டார்.
![]() |
Union Minister Hardeep Singh Puri |
மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அவரது மனைவி லட்சுமி பூரி கவுஷம்பியில் உள்ள யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
![]() |
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று பி.எச்.சி. சங்காலியில் செலுத்திக் கொண்டார்.
![]() |
Kerala Chief Minister Pinarayi Vijayan |
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
![]() |
Delhi: Veteran cricketer Kapil Dev received his first doseof #COVID19Vaccine at Fortis Hospital today. |
No comments
Thank you for your comments