Breaking News

ஆபாச வீடியோ விவகாரம்... நீர்பாசனத்துறை அமைச்சர் ராஜிநாமா!

பெங்களூர், மார்ச் 3:

ஆபாச வலைத்தளத்தில் கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால்  தனது பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் ஜர்கிஹோலி.



கர்நாடக மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஏற்றுக் கொண்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.

கர்நாடகத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர், அடையாளம் தெரியாத பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், பெண் ஒருவரிடம்  அமைச்சர் ரமேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் அரசு வேலை கோரி அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியிடம் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை அமைச்சர் ரமேஷ் துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகவும் அத்துமீறியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களைப் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.    அமைச்சரிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாக புகார் அளித்திருந்தார்.

கர்நாடக போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை நேரில் சந்தித்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்களை கமிஷனரிடம் அளித்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி கூறினார்.

No comments

Thank you for your comments