திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பெயர் பட்டியல் - தொகுப்பு
சென்னை, மார்ச் 11-
திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் - 25 தொகுதிகள் = காங்.,
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தொகுதி பட்டியலை காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார்.
1. சென்னை வேளச்சேரி,
2. பொன்னேரி,
3. ஸ்ரீபெரும்புதூர்,
4. சோளிங்கர்,
5. ஊத்தங்கரை,
6. ஓமலூர்,
7. உதகை,
8. கோவை தெற்கு,
9. காரைக்குடி,
10. மேலூர்,
11. சிவகாசி,
12. ஸ்ரீவைகுண்டம்,
13. குளச்சல்,
14. விளவங்கோடு,
15. கிள்ளியூர்,
16. ஈரோடு கிழக்கு,
17. தென்காசி,
18. அறந்தாங்கி,
19. விருத்தாசலம்,
20. நாங்குநேரி,
21. கள்ளக்குறிச்சி,
22. ஸ்ரீவில்லிபுத்தூர்,
23. திருவாடனை,
24. உடுமலைப்பேட்டை,
25. மயிலாடுதுறை
ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள் = இ.கம்யூ.,
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1. பவானிசாகர்,
2. வால்பாறை,
3. திருப்பூர் வடக்கு,
4. சிவகங்கை,
5. திருத்துறைப்பூண்டி,
6. தளி
ஆகிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-6 தொகுதிகள் = மா.கம்யூ.,
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது.
1. திருப்பரங்குன்றம்,
2. கந்தர்வக்கோட்டை (தனி),
3. திண்டுக்கல்,
4. கோவில்பட்டி,
5. அரூர் (தனி),
6. கீழ் வேளூர் (தனி)
ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள்-6 தொகுதிகள் = விசிக
திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1. காட்டுமன்னார்கோவில்,
2. அரக்கோணம்,
3. செய்யூர்,
4. வானூர்,
5. நாகப்பட்டினம்,
6. திருப்போரூர்
ஆகிய 6 தொகுதிகளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் காண்கிறது. இதில் 4 தனித் தொகுதிகள் ஆகும். இரண்டு பொதுத்தொகுதிகள் ஆகும்.
மறுமலர்ச்சி திமுக -6 தொகுதிகள் = மதிமுக
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட மதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.
1. மதுரை தெற்கு - பூதூர் பூமி நாதன்,
2 . மதுராந்தகம்- மல்லை சத்யா, துணை பொதுசெயலாளர்
3. சாத்தூர் - ரகுராம்
4. பல்லடம் - முத்து ரத்தினம்
5. அரியலூர் - சின்னப்பா
6. வாசுதேவ நல்லூர் - சதன் திருமலைக்குமார்
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3 தொகுதிகள் = (ஐ.யூ.எம்.எல்)
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது, இக்கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இன்று வெளியிட்டார்.
1. கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் M. L.A
2. வாணியம்பாடி - என்.முஹம்மது நயீம்
3. சிதம்பரம் - ஏ.எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி
ஆகிய மூவரும் போட்டியிடுவார்கள் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3 தொகுதிகள் = கொ.ம.தே.க
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு,
1. திருச்செங்கோடு
2. பெருந்துறை
3. சூலூர்
ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.
மனிதநேய மக்கள் கட்சி-2 தொகுதிகள் = ம.ம.க
திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு
1. மணப்பாறை,
2. பாபநாசம்
ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் மனித நேய மக்கள் கட்சி களம் காண்கிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சி - 1 தொகுதி = த.வா.க
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு
1. பண்ருட்டி தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை
ஆதித்தமிழர் பேரவை கட்சி - 1 தொகுதி
திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை கட்சியும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
1. அவிநாசி தொகுதி
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி- 1 தொகுதி
திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியது.
உசிலம்பட்டி தொகுதியில்
போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கதிரவன் பேட்டியளித்தார்.
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு விவரம் = 61 தொகுதிகள்
மதிமுக-6 தொகுதிகள்
காங்கிரஸ் - 25 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் - 6 தொகுதிகள்
மக்கள் விடுதலை கட்சி-1 தொகுதி
மனிதநேய மக்கள் கட்சி-2 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள்-6 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-6 தொகுதிகள்
தமிழக வாழ்வுரிமை கட்சி - 1 தொகுதி
ஆதித்தமிழர் பேரவை கட்சி - 1 தொகுதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3 தொகுதிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3 தொகுதிகள்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி- 1 தொகுதி

No comments
Thank you for your comments