Breaking News

கடந்த 5 ஆண்டுகளில் 405 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல்...

புதுடெல்லி:

கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டுவரை கட்சி மாறி போட்டியிட்ட 433 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.



கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டுவரை கட்சி மாறி போட்டியிட்ட 433 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. யார் யார் எந்த கட்சிக்கு சென்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது, 

2016 முதல் 2020-ம் ஆண்டுவரை 405 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி தேர்தலில் போட்டியிட்டனர். 

அவர்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். 

பா.ஜனதாவில் இருந்து 18 பேர் மட்டுமே வெளியேறினர்.

இப்படி வெளியேறிய எம்.எல்.ஏ.க்களில் 182 பேர் பா.ஜனதாவிலும், 38 பேர் காங்கிரசிலும், 25 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலும் சேர்ந்தனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால்தான், மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாசலபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரசுகள் கவிழ்ந்தன.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, 12 எம்.பி.க்கள் கட்சி மாறி போட்டியிட்டனர். அவர்களில் 5 பேர் பா.ஜனதாவில் இருந்து வெளியேறி, காங்கிரசில் சேர்ந்தனர்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் 16 பேர் கட்சி மாறி போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள். 10 பேர் பா.ஜனதாவில் சேர்ந்தனர்.

No comments

Thank you for your comments