Breaking News

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்....தமிழக அரசு

சென்னை

புதுச்சேரி ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.



இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  பொதுமக்கள், கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பயமில்லாமல் முகக் கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.  புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்து பிற மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டிற்கு வருவோரும் இ-பாஸ் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயம் என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.





No comments

Thank you for your comments