லலிதா ஜுவல்லரியில் ரெய்டு.. சிக்கியது கணக்கில் வராத ரூ.1000 கோடி..
சென்னை, மார்ச் :
லலிதா ஜுவல்லரியில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரபல லலிதா ஜூவல்லரி நகைக் கடைக்கு சொந்தமான இடங்களில், கடந்த மார்ச் 4ம் தேதி முதல் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என 27 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லலிதா ஜுவல்லரி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய நகையை வாங்கி புதிதாக மாற்றும்போது சேதாரம் என்று பலகோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏராளமான பணத்தினை பரிவர்த்தனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், போலி கணக்குகள் மூலம் தங்கத்தை வாங்கியது போலவே போலி கணக்குகள் மூலம் தங்கத்தை விற்று வந்ததும் தெரியவந்திருக்கிறது. நகைக்கடையில் இருந்து 1.2 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இவர்கள் தங்கம் இருப்பு வைத்திருப்பதிலும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து லலிதா ஜூவல்லரியின் நிர்வாகிகள், உரிமையாளர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments