ஆண்டவனாலும் அதிமுகவை இனி காப்பாற்ற முடியாது - அதிமுக அதிருப்தி எம்எல்ஏ
அமமுவில் இணைந்தார் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ
சென்னை:
ஆண்டவனாலும் அதிமுகவை இனி காப்பாற்ற முடியாது. வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை என ராஜவர்மன் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
தமிழக சட்டசபையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராஜவர்மன் கூறியதாவது,
கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை உழைப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது வருத்தம். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால்தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை.
சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காக்க முடியும். ஆண்டவனாலும் அதிமுகவை இனி காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments