Breaking News

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள்

 சென்னை:   

திமுக தேர்தல் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் இன்று  (11.03.2021) அறிவிக்கப்பட்டுள்ளது..



தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் தொகுதி பங்கீடு ஒதுக்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது.

  1. பவானிசாகர் (தனி) (107),
  2. திருப்பூர் வடக்கு (113),
  3. வால்பாறை (தனி) (124),
  4. சிவகங்கை (186),
  5. திருத்துறைப்பூண்டி (166), 
  6. தளி (56),

உள்ளிட்ட தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

முத்தரசன் பேட்டி

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வேறுபாடு இல்லாமல் வெற்றி பெறும்.  பாஜக-வால் உருவாக்கப்பட்ட அணி, தமிழகத்தில் எப்போதும் வெற்றிபெற முடியாது. காப்புத் தொகையை கூட பெற முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.





No comments

Thank you for your comments