தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
திருவள்ளூர், மார்ச் 4-
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அறிவித்துள்ளார்.
06.04.2021 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
எனவே, தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமும், நல்ல திடகாத்திரமும் வாய்ந்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCOs) மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள் (ORs) திருவள்ளுர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படை வீரர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்படும் பணிநாள் ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments