பயிற்சி மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி :
தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது என்று பயிற்சி மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
31.03.2021 மார்ச் மாதம் 26 ஆம் நாள் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி இயக்குநரகம் (DME), 2015ஆம் ஆண்டு MBBS சேர்ந்து ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணிநிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்து , ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால் 30/3/21 அன்று மருத்துவ கல்வி இயக்குநரகம் (DME) சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், காலவரையின்றி 2016ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் இறுதியாண்டு தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராக சேரும் வரை 2015ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை DME எடுப்பது சரியல்ல. இது இளம் மருத்துவர்களின் உழைப்பை குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும். இத்தகைய செயலை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்பு (PG) தேர்வுக்கும் இதர போட்டித் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இம்மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
ஆகவே ,தமிழக அரசும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் அவர்களும், மருத்துவ கல்வி இயக்குனர் அவர்களும் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு ..
# 2015ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு , உடனடியாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் (TNMC) பதிவு செய்து தர வேண்டும் .
# ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ அலுவலராக (Assistant surgeon general) பணி நியமனம் செய்து மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் இன்று காலை 10.00 மணியளவில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments
Thank you for your comments