Breaking News

சட்ட விரோதமாக மதுபானம் பதுக்குதல் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு

கடலூர், மார்ச் 23-

தேர்தல் விதிகளை மீறி சட்ட விரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு தெரிவிக்கலாம்                  தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்திரசேகர் சாகமூரி   அவர்கள் தெரிவித்துள்ளார்.



2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை  முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது தொடர்பாக கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தெரிவித்ததாவது, தேர்தல் விதிகளுக்கு முரணாக மதுபானங்களை கடத்துதல், பதுக்குதல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட வாரியாக மதுவிலக்கு அமல்பிரிவு, காவல்துறை அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர்.  அவ்வாறு நியமிக்கப்பட்ட சிறப்புக்குழு அந்தந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை பதுக்குதல் விநியோகம் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.  மேலும் டாஸ்மாக் சட்ட அமலாக்கப்பிரிவு அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்.  அரசு நிர்ணயித்த நேரத்தில் மதுகூடங்கள் செயல்படுவதை கண்காணிப்பது மதுபான சில்லறை விற்பனை கடைகள்  பதிவேட்டை சரியாக பராமரிக்கிறார்களா என்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். 

 கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் சிதம்பரம், கோட்ட கலால் அலுவலர்,  சத்தியன் ( 9095132388 ) தலைமையில், மதுவிலக்கு  அமலாக்கப்பிரிவு, தலைமைக் காவலர், பண்ருட்டி,    மகேஷ் (9498154903; ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  எனவே தேர்தல் விதிகளைமீறி சட்டவிரோதமாக மதுபானம் பதுக்குதல், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை மேற்குறிப்பிட்டுள்ள சிறப்புக்குழு அலுவலர்களின் கைப்பேசி எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம். 


No comments

Thank you for your comments