Breaking News

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை ஆய்வு

வேலூர், மார்ச் 23-

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை  (STRONG ROOM) மற்றும் கண்காணிப்பு கேமராவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சண்முகசுந்தரம்,  உடன் தேர்தல் காவல் பார்வையாளர்  மாயங்க் ஸ்ரீவஸ்தவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் நேற்று (22.03.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் 06.04.2021 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அணைகட்டு சட்டமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த பாதுகாப்பு அறை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவலர்கள் பராமரித்து வரும் பதிவேடுகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சண்முகசுந்தரம்,  அவர்கள் பார்வையிட்டு பதிவேடுகளில் கையொப்பமிட்டார்.

இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்  வெங்கட்ராமன், வட்டாட்சியர்  பழனி, காவல் துணை கண்காணிப்பாளர்   மகேஷ் மற்றும் வருவாய் துறை, காவல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 


No comments

Thank you for your comments