Breaking News

உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

காஞ்சிபுரம்,மார்ச்23-

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் கிராமங்கள்தோறும் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கம்பாக்கம், தம்மனூர், காமராஜபுரம், இளையனார்வேலூர், காவாந்தண்டலம், மாகறல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர், வளத்தோட்டம், காலூர், பெரியா நத்தம், கீழ்பேரமல்லூர், ஆசூர், அவலூர் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து சால்வை அணிவித்து குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

செல்லுமிடமெல்லாம் எங்கள் வாக்கு குக்கர் சின்னத்துக்கு அளிப்போம் என பொதுமக்கள் வரவேற்பு அளித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பொதுமக்களிடம் அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசியதாவது& குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் நிச்சயம் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன்,. அதற்கு எனக்கு அனைவரும் ஆதரவு அளியுங்கள். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது உறுதிமொழியை தெரிவித்து பொதுமக்களிடம் வாக்கு வேட்டை நடத்தினார்.

இந்த பிரசாரத்தின் போது மாவட்ட மகளிரணி வரலட்சுமி, ஒன்றிய செயலாளர் தம்மனூர் தாஸ், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலஞ்சேரி செயலாளர் கமலக்கண்ணன், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் சந்தீப், உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, உத்திரமேரூர்  ஒன்றிய  செயலாளர் சுரேஷ், பேரூராட்சி கழகச் செயலாளர் கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் மாதவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன், அமமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் தேர்தல் பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது.

No comments

Thank you for your comments