Breaking News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... சசிகலா உருக்குமான அறிக்கை

சென்னை, மார்ச் 3-

தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும்.. நான் என்றும் பதவிக்கோ, பட்டத்திற்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.



கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்வதற்குள் தமிழகமே ஸ்தம்பித்த போனது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வழிநெடுகிலும் அவருக்கான பாராட்டுக்களும், வரவேற்பும், குவிந்திருந்தன . அவர் அப்படி தமிழகத்திற்கு ஒரு பெரிய ஆரவாரத்துடன் வந்ததற்கு காரணம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள்.... அரசியலில் பெரிய மாற்றங்கள் வரும்... அதிமுகவில் குழப்பம் வரும் என்று... அரசியல் நகர்வுகளை அனைவரும் கவனித்து வந்தனர்..  ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று பிரபலங்கள் சிலர் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தனர்... சசிகலா அரசியல் ஆட்டம் ஆரம்பித்துவிட்டார் என்று அவர்மீதான பார்வையும் கவனமும் அதிகமானது. இந்நிலையில்,  அரசியலை விட்டே விலகுவதாக   இன்று  (03.03.2021 )அறிக்கை  வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜெயலலிதா அவர்கள் கூறியபடி இன்னும் நூற்றாண்டுகளுக்கு மேலாக, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா  நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன் துவங்கிய அ.ம.மு.க. அதி.மு.கவுடன் இணையுமா என பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




No comments

Thank you for your comments