Breaking News

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்

 விருத்தாசலம்: 

தேமுதிக கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விருத்தாச்சலம் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் .



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் தேசிய மூற்போக்கு திராவிட கழக  மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது பிறந்த நாளான இன்று விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் சாமிதரிசனம் செய்து பின்னர் தொண்டார்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். 



அதனை தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்,  தேமுதிக கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விருத்தாச்சலம் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் .

வேட்புமனு தாக்கல் செய்து பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேசிய மூற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு 2006ல் முதல் வெற்றியை பெற்றுத்தந்த தொகுதி விருத்தாசலம் தொகுதி. 

எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்த தொகுதி என்பதால்  2021ல் முதல் முறையாக இங்கு போட்டி இடுகின்றேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

2006ல் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி மக்களின் நலனுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த முறையும் தேமுதிக கண்டிப்பாக வெற்றிபெற்று மக்கள் சேவையில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.




விருத்தாசலம் செய்தியாளர் : ஆர்.காமராஜ்

No comments

Thank you for your comments