திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 4:
திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துபேசியதில், 2021-தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட முடிவானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் இன்று (4-3-2021) கையெழுத்திட்டனர்.
நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (4-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் 6 (ஆறு) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துபேசியதில், 2021-தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட முடிவானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த பேச்சு வார்த்தையின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், டி.இரவிக்குமார், எம்.பி., பொருளாளர் முகமது யூசுப், திமு கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் விசிக - 6, ஐ.யூ.எம்.எல். - 3, ம.ம.க. - 2 ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.



No comments
Thank you for your comments