திமுக கூட்டணியில் கொ.ம.தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 9-
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (09.03.2021) ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மேலும் சிறிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
ஏறக்குறைய அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மட்டும் தொகுதிகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று (09.03.2021) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மூன்று தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்குக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையின்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன்-கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு - 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு - 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு - 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு - 6 தொகுதிகள்,
மதிமுக - 6 தொகுதிகள்,
காங்கிரஸ் கட்சியுடன் - 25 தொகுதிகள்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) - 6 தொகுதிகள்,
வாழ்வுரிமைக் கட்சி - 1தொகுதி,
ஆதித்தமிழர் பேரவைக்கு - 1 தொகுதி,
மக்கள் விடுதலைக் கட்சிக்கு - 1 தொகுதி,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு - 3 தொகுதி
ஆக மொத்தம், திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

No comments
Thank you for your comments