வலுவிழந்ததா 3வது கூட்டணி....? காங்கிரசுக்கு அழைப்பு விடுத்து ஏமாற்றம் அடைந்த மநீம...!
சென்னை, மார்ச் 7:
திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்ததால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றம் அடைந்துள்ளது.. அழைப்பு விடுத்து மநீம... ஏமாற்றம் அடைந்துள்ளது... இதனால் 3வது கூட்டணி.... வலுவிழந்த... என்ற பேச்சு தொடர ஆரம்பித்துள்ளது...
திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. இதுற்கெல்லாம் சலைத்தவர் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் என நிரூபனம் ஆகியுள்ளது... அதே போன்று காங்கிரஸ் கட்சியினரும், கூடுதலான தொகுதிக்காக கூட்டணி தாவுகிறவர்கள் நாங்கள் அல்ல என மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையிலான நம்பிக்கையை பலப்படுத்தி நிரூபித்து உள்ளனர்.
திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிக குறைவான தொகுதிகளை கொடுக்க திமுக முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர்.
இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்று சிலர் கூறி உள்ளனர். சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும், சிலர் கமல் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று தகவல் உலாவந்தன.
காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்ப மொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் நிலவி வந்தன.
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு கமல் ஹாசனின் மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார். திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.
இந்நிலையில், தி.மு.க-காங்கிரஸ் இடையே நேற்று இரவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 25 (இருபத்தைந்து) சட்டமன்றத் தொகுதிகளிலும் - கன்னியாகுமரி (இடைத்தேர்தல்) நாடாளுமன்றத் தொகுதியும் பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காங்கிரஸ் கட்சியினரும், கூடுதலான தொகுதிக்காக கூட்டணி தாவுகிறவர்கள் நாங்கள் அல்ல என மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையிலான நம்பிக்கையை பலப்படுத்தி நிரூபித்து உள்ளனர்.
எதிர்ப்பார்த்து அழைப்பு விடுத்த மக்கள் நீதி மய்யம் ஏமாற்றத்தை தழுவிவுள்ளது.. இதனால் 3வது கூட்டணி.... வலுவிழந்த... என்ற பேச்சு தொடர ஆரம்பித்துள்ளது...
காலமே அனைத்திற்குமான விடை.... மாற்றம் ஒன்றே மாறாதது... எதுவும் எப்போது நடக்கலாம்...
ஜெயிக்க போவது யார் என்று காலச்சக்கரம் சுழற்சியில் காலச்சக்கரம் கண்ணாடி காட்டும்... காத்திருப்போம்...
ஏமாற்றம் அடைந்தது மா நீ ம அல்ல. காங்கிரஸ் தான் மா நீ மா வாழ்த்தன் 25 கிடைத்தது. இல்லன்னா 0 தான். Mnm(mnm) செய் கும். நாளை நமதே.
ReplyDelete