திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது- 25 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 7-
திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் 25 சட்டமன்ற தொகுதிகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவானது. மேலும் தி.மு.க-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று (07/03/2021) ஒப்பந்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தி.மு.க-காங்கிரஸ் இடையே நேற்று இரவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களும் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 25 (இருபத்தைந்து) சட்டமன்றத் தொகுதிகளிலும் - கன்னியாகுமரி (இடைத்தேர்தல்) நாடாளுமன்றத் தொகுதியும் பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பேச்சு வார்த்தையின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் (தமிழகப் பொறுப்பு) திரு. தினேஷ் குண்டுராவ், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர்.ராமசாமி பங்கேற்றனர்.
திமுகழகப் மகளிர் அணிச் செயலாளரும் - கழக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்
திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 3+2+6+6+6+25 =48 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்,
மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியுடன் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
No comments
Thank you for your comments