Breaking News

காட்பாடியில் தேர்தல் ஆலோசனை கூட்டம்!

வேலூர், மார்ச் 3- 

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலேசானை கூட்டம் நேற்று நடந்தது.



காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காட்பாடி வட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.பாலமுருகன், பி.செந்தில், தேர்தல் துணை வட்டாட்சியர் டி.முரளிதரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும், கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் விரைந்து சென்று நிவர்த்தி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அடிப்படை தேவைகள் இருக்கிறதா என்றும் மேற்பார்வையிட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் காண்பிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல் விளக்கமும் விளக்கி கூறப்பட்டது. கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் செய்திருந்தார்.

No comments

Thank you for your comments