2 லட்சம் தடுப்பூசிகள் நன்கொடை - இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி
நியூயார்க்:
ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு ஐ.நா.சபை நன்றி தெரிவித்துக்கொண்டது.
![]() |
| Jean-Pierre Lacroix |
இதையொட்டி ஐ.நா. அமைதி நடவடிக்கைகளுக்கான துணைப்பொதுச்செயலாளர் ஜீன் பியர் லாக்ரொக்ஸ் மற்றும் செயல்பாட்டு ஆதரவுக்கான துணைப்பொதுச்செயலாளர் அத்துல் கரே ஆகியோர், ஐ.நா. அமைதிப்படையினருக்கு 2 லட்சம் தடுப்பூசி வழங்கியதற்காக இந்தியாவை பாராட்டினர்.
ஜீன் பியர் லேக்ரோக்ஸ் இதுபற்றி குறிப்பிடுகையில்,
“அமைதிப்படையினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது எங்களின் முன்னுரிமையாகும். இது எங்கள் பணியாளர்களையும், அவர்களின் முக்கிய பணிகளைத் தொடர அவர்களின் திறனை பாதுகாப்பதற்கும் உதவுகிறது” என குறிப்பிட்டார். மேலும், “எங்களது அமைதி காக்கும் பணியில் நீண்டகாலமாக இந்தியா உறுதியான ஆதரவாளராக உள்ளது.
மேலும் எங்கள் படையினருக்கு பயன் அளிப்பதற்காகவும், அவர்களின் உயிர்காக்கும் பணிகளை பாதுகாப்பான முறையில் தொடரவும் உதவுவதற்காக கொரோனா தடுப்பூசிகளை தாராளமாக நன்கொடையாக வழங்கியது. இதற்காக இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

No comments
Thank you for your comments