இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!
பாம்பேய், மார்ச் 2-
சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அழிந்த பாம்பேய் நகரில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வாழ்ந்தவர்களின் நாகரீகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அகழ்வாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தான் பாம்பேய் நகரம் அகழ்வாய்வாளர்களின் சொர்க்க பூமியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் சுமார் 2,000 ஆண்டுகள் முன்னதாக பயன்படுத்தப்பட்ட தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
4 சக்கரங்களுடன் காணப்படும் தேர், பழங்காலத்தில் குதிரைகள் கட்டிப்போட பயன்படுத்திய லாயத்தின் அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்திலும் தேர் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வு கூறுகின்றன.
சிதையாமல் இருக்கும் தேரில் இரும்புக்கூறுகள், பித்தளை மற்றும் உலோகத்திலான வேலைபாடுகள், கயிறு மற்றும் மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. பார்ப்பதற்கு கலைநயத்துடன் காணப்படும் தேர் அக்காலத்தில் திருவிழா மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர் சிதையாமல், மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்தத் தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி 7ம் தேதி இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறினர்.






No comments
Thank you for your comments