சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை :
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பொதுமேலாளரின் அலுவலகத்துக்கு பிற்பகல் கடிதம் ஒன்று வந்தது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கொச்சின் விமான நிலையம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றில் மார்ச் 1ம்தேதி மனித வெடிகுண்டாகவோ கார் குண்டு மூலமாகவோ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மார்ச் 1ம் தேதி வரை தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வந்த போலீசார் உஷார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments