அதிமுக தலைமையிலான முதல் கூட்டணி ஒதுக்கீடு உறுதி... பாமக.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு...
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 27.02.2021அன்று அறிவித்தார்.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அஇஅதிமுக - பாமக இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை 27.02.2021அன்று மாலை நடைபெற்றது. அதிமுக தரப்பில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் பாண்டியராஜன், ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் செம்மலை, மற்றும் கே.பி. முனுசாமி, தம்பிதுரை, வைகைச் செல்வன், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் பங்கேற்றனர்.
அதேபோன்று, பாமக தரப்பில் ஜி.கே. மணி, அன்புமணி, ஏ.கே. மூர்த்தி, பாலு ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உறுதியானதும், கூட்டணி உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். கூட்டணி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டாக அன்புமணி ராமதாஸ், மற்றும் ஜி.கே.மணியிடம் வழங்கினர்.
பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளன.
அ.தி.மு.க.வில் முதல் கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பாமகவுக்குஉறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments