சர்வதேச எரிசக்தி மாநாட்டில்... பிரதமர் மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது
புதுடெல்லி :
அடுத்த வாரம் நடைபெறும் வருடாந்திர சர்வதேச எரிசக்தி (CERAWeek) மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.
மார்ச் 1 முதல் 5 வரை நடைபெறும் இந்த செராவீக் மாநாடு -2021 இல் பிரதமர் சிறப்புரையாற்றுவார் என்றும் அதன் அமைப்பாளர் ஐ.எச்.எஸ். மார்கிட் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பிரதமர் மோடியை தவிர்த்து காலநிலைக்கான அமெரிக்க சிறப்பு ஜனாதிபதி தூதர் ஜான் கெர்ர மற்றும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரும், திருப்புமுனை எரிசக்தி பில் கேட்ஸின் நிறுவனரும், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சவுதி அரம்கோ, அமீன் நாசர் ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றுவார்கள்.
"உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பங்கு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம். மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் நிலையான வளர்ச்சியில் இந்தியாவின் தலைமையை விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காகவும் மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கி கவுரவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என ஐ.எச்.எஸ். மார்கிட் துணைத் தலைவரும், மாநாட்டின் தலைவருமான டேனியல் யெர்கின் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி, வறுமை குறைப்பு மற்றும் ஒரு புதிய எரிசக்தி எதிர்காலம் ஆகியவற்றுக்கான அதன் பாதையை நிர்ணயிப்பதில், இந்தியா உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் மையத்தில் உருவெடுத்துள்ளது. மேலும் உலகளாவிய எரிசக்தி அணுகலை உறுதிசெய்து, நிலையான எதிர்காலத்திற்கான காலநிலை நோக்கங்களை பூர்த்தி செய்ய அதன் தலைமை முக்கியமானது, என்றார். .
வருடாந்திற சர்வதேச மாநாட்டில் எரிசக்தி தொழில் தலைவர்கள், வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பத்தின் தலைவர்கள், நிதி மற்றும் தொழில்துறை சமூகங்கள் மற்றும் எரிசக்தி தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

No comments
Thank you for your comments