Breaking News

பிரம்மபுரத்தில் பௌர்ணமி மஹா மயான ருத்ர யாகம்!

வேலூர், பிப்.26-

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு இன்று பௌர்ணமியை முன்னிட்டு மஹா மயான ருத்ர யாகம் நடக்கிறது. காட்பாடி அடுத்துள்ள பிரம்மபுரத்தில் பௌர்ணமி திதியை முன்னிட்டு இன்று மாலை 3:50 மணியளவில் சிறப்பு பூஜைகள் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சிவபெருமான் ஆலயத்தில் தொடங்குகிறது.


இதைத்தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடைபெறும். மாலை 6:00 மணியளவில் சிவபெருமானுக்கு மஹா மயான ருத்ர யாகம் வெகுச் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் முக்கவசங்கள் அணிந்து கொண்டும், கிருமி நாசினி தடவிக் கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் இந்த மஹா மயான ருத்ர யாகத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபடலாம். பூஜையில் அனைத்து சிவ சொந்தங்களும் வந்து கலந்து கொண்டு ஈசனின் அருள் பெருமாறு கோயில் நிர்வாகியும் அகோரியுமான ஸ்ரீராம்ராஜ் தெரிவித்துள்ளார். பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படும். பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம்ராஜ் அகோரி செய்துள்ளார்.


No comments

Thank you for your comments