பழைய காட்பாடியில் மாடு விடும் திருவிழா!
வேலூர், பிப்.26-
பழைய காட்பாடியில் மாடு விடும் திருவிழா மிகச் சிறப்பான முறையில் நேற்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் மாடு விடும் திருவிழா நேற்று மிகச் சிறப்பான முறையில் நடந்தது, இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஒடின.
மாடு பிடி வீரர்கள் திரண்டு வந்து மாடுகளை அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர். இந்த மாடு விடும் விழாவினை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் மாடு விடும் திருவிழாவை காண வந்த சிலருக்கு மாடுகள் இடித்து விட்டு ஓடியதில் லேசான காயம் எற்பட்டது. மாடு விடும் திருவிழாவை முன்னிட்டு காட்பாடி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தனர். இதனால் வாகன திருட்டு மற்றும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் அமைதியாக மாடு விடும் திருவிழா நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments