Breaking News

சாய் நகரில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை சாலை சரி செய்வது எப்போது?

 குன்னூர், பிப்.17-

உதகை தாலுகாவுக்கு உட்பட்ட ஜங்ஷன் பகுதியில் அருகில் உள்ள சாய் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நடைபாதை சாலை சரி செய்யப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நீலகிரி  மாவட்டம், உதகை  தாலுகாவுக்கு உட்பட்ட ஜங்ஷன் பகுதி அருகில் உள்ள சாய் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டுள்ள நடைபாதை சாலை சரிவர இல்லாத நிலை காணப்படுகிறது. இந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், இதன் அருகே வசிக்கும்  பொதுமக்கள் ஆகியோருக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  பாதிக்கப்படாமல் இருக்க இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தப்படும் நடைபாதை சாலையை சரி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகை நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியை பார்வையிட்டு பொதுமக்கள் தினமும் சந்திக்கும் பிரச்னையை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை பொதுமக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர். உதகை நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1 comment:

  1. தமிழகம் முழுவதும் ... இதே நிலைதான்

    ReplyDelete

Thank you for your comments