Breaking News

ஊரக புத்தாக்க திட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

கடலூர், பிப்.24-

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் கடலூர் மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், புவனகிரி, குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஊரக தொழில் துறை உருவாக்கி அவர்களுக்க நிதி சம்மந்தமான தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் கொரோனா காலக் கட்டத்தில் புலம் பெயர்ந்த இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஊரக பகுதிகளில ;சுயஉதவி குழுக்கள் மூலம் தொழில் தொடங்கவும், கொரோனா நிதியாக 12762 நபர்களுக்கு ரூ.19 கோடி 41 லட்சம்  இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கிராம அளவில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் ஆறு வட்டாரங்களில் உள்ள 280 ஊராட்சியில் நடைபெற்றுள்ளது. இந்த வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஊராட்சிகளில் உள்ள தொழில் முனைவோர் தொழில் குழுக்கள் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்காக தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களது தொழில் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு தொழில் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவது இத்துறையின் நோக்கமாகும். 

இத்திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தின் மூலம் கிராமபுறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்கவும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையவும் இத்திட்டத்தின் மூலம் முழு முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரகபுத்தாக்கதிட்டம், மாவட்டசெயல் அலுவலர் எஸ்.ராஜாத்தி அவர்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், பி.அகிலன் அவர்கள்,மாவட்ட தொழில் மையம் அலுவலர் இளங்கோவன், இளம் தொழில் வல்லுநர், செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்துகொண்டனர்


No comments

Thank you for your comments