Breaking News

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர், பிப்.24-

தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.



தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

அதனடிப்படையில் வரும் 26.02.2021 அன்று திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.02.2021 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments