தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்- சட்டசபை தேர்தல் முழு அறிவிப்பு .....
புதுடெல்லி :
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா 26-02-2021 அன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேர்தல் தேதியை 26-02-2021 அன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு ஒரே கட்டத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ளது.
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 26/02/2021 அன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தார்.
முன்னதாக, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:
தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பீகார் தேர்தலில் பல படங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது; பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். கொரோனா உச்சத்தில் இருந்த 2020-ல் சட்டப்பேரவை தேர்தலைத் நடத்தியுள்ளோம்.
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்னைகளை சமாளித்து வருகிறோம். தேர்தலை சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. உள்துறை அமைச்சகம் வழங்கிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன்; பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது; மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை இருப்பது உறுதி செய்யப்படும்.
கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
5 மாநிலங்களில் உள்ள வாக்கு தொகுதிகள்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும்
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும்
அஸாமில் 126 தொகுதிகளுக்கும்
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும்
சேர்த்து 5 மாநிலங்களுக்கு 824 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மே 24ம் தேதியுடன் 15வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 88 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
வேட்பு மனுத் தாக்கல் செய்ய 2 பேருக்கு மட்டுமே அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் முறையில் வாக்களிக்க வாய்ப்பு.
வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வர்தன் நியமனம்;
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
தமிழக தேர்தல் காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தேர்தல் செலவின பார்வையாளராக மதுமாதன், பாலகிருஷ்ணா ஆகியோர் நியமனம்.
தேர்தல் செலவு
தமிழ்நாட்டில் வேட்பாளர் தேர்தல் செலவு ரூ. 30 லட்சமாக நிர்ணயம்.
புதுச்சேரியில் வேட்பாளர் தேர்தல் செலவு ரூ. 24 லட்சமாக நிர்ணயம்
என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி
தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.
மொத்த தொகுதிகள் 234, எஸ்.ஸி. 44 தொகுதிகள்,எஸ்டி 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளன.
மனுத்தாக்கல் ஆரம்பம் - மார்ச் 12ம் தேதி
மனுத் தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி
வேட்பு மனுமீதான பரிசீலனை மார்ச் 20ம் தேதி
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22ம் தேதி
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத் தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவிப்பு மே 2ம் தேதி
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மனுத்தாக்கல் ஆரம்பம் - மார்ச் 12
மனுத் தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி
வேட்பு மனுமீதான பரிசீலனை மார்ச் 20 -
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22ம் தேதி
தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 6ம் தேதி
வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவிப்பு மே 2ம் தேதி
கேரளா மாநிலத் தேர்தல் தேதி
கேரளா மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது
மனுத்தாக்கல் ஆரம்பம் - மார்ச் 12ம் தேதி
மனுத் தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி
வேட்பு மனுமீதான பரிசீலனை மார்ச் 20 ம் தேதி
வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22ம் தேதி
தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 6ம் தேதி
வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவிப்பு மே 2ம் தேதி
Schedule for General Election to the Legislative Assembly of Tamil Nadu:
Poll Events | Single Phase (All 234 ACs) |
Date of Issue of Notification | 12.03.2021 (Friday) |
Last date of making nomination | 19.03.2021 (Friday) |
Date of Scrutiny | 20.03.2021 (Saturday) |
Last date of withdrawal | 22.03.2021 (Monday) |
Date of Poll | 06.04.2021 (Tuesday) |
Date of Counting | 02.05.2021 (Sunday) |
Date of completion | 04.05.2021 (Tuesday) |


No comments
Thank you for your comments