புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜிநாமா
புதுச்சேரி, பிப்.16-
புதுச்சேரி காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ததன் மூலம் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ஆனால், அவரது பதவி விலகலால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் நேராது என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.
புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ராஜினாமா கடிதத்தை ஜான்குமார் வழங்கினார்.
நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016-ல் விட்டுக்கொடுத்தவர் ஜான்குமார். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்,
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், 1 சுயேட்சையின் (மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது. இன்று எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்ததன் மூலம் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும். புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. பெரும்பான்மையை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments