கபடி போட்டித் தொடரில் தேசிய கீதம் பாடப் போகும் சன்னி லியோன்
மும்பை, ஜூன் 9-
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து ஐபிஎல் பாணியில் கபடி
போட்டித்தொடரை நடத்தி வருகின்றன. நான்காவது ஆண்டாக தொடரும் ப்ரோ கபடி
தொடரின் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதன் தொடக்க
நிகழ்ச்சியில் சன்னி லியோன், இந்திய தேசிய கீதத்தை பாட உள்ளாராம்.
ஏதாவது ஒரு போட்டியின் தொடக்கத்திற்கு முன்பு, சன்னி லியோன் தேசிய
கீதம் பாட உள்ளார். நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த
திட்டத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து வருகிறார்கள்.
காமெடி ஷோ நடிகர் கபிலையும் இதே நோக்கத்திற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
அணுகியுள்ளனர். அவர் இன்னும் தேதியை இறுதி செய்யவில்லை.
No comments
Thank you for your comments