Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே 12-ம் வகுப்பு மாணவி கடத்தல் 3பேர் கைது

விழுப்புரம், ஜூன் 9-
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு மகள் சத்யா (16) இவர் வெள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சத்யாவை உறவினர்கள் மற்றும் அவரது தோழிகளின் வீடுகளில் அவரது பெற்றோர்கள் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
மேலும் விசாரித்தபோது அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் மனைவி பழனியம்மாள், இவரது தம்பி பூமிநாதன் ஆகியோர் உதவியுடன் சிதம்பரம் அருகே உள்ள புதுப்பட்டிணத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அண்ணாமலை (24) என்பவர் சத்யாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முதுதுக்கண்ணு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அண்ணாமலை உட்பட 3பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments