சீனாவில் இருந்து பால் இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
தரம் குறைவாக இருப்பதால் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஐ.எம்.இ.ஐ. மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத சிலவகை சீன மொபைல் போன்களுக்கும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், சீனாவில் இருந்து உருக்கு பொருட்கள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத செல்போன்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உலக வர்த்தக மைய விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதேபோன்ற பிரச்சனைகள் கொண்ட பொருட்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தற்போதே தடை செய்ய இயலாது என்றும் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments