வேட்புமனு தாக்கல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
வேலூர், ஏப்.20-
வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கலின்போது அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர்
இரா.நந்தகோபால் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா.பகலவன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியர்
மாவட்டத்தில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்கள், வாக்குச் சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதன்படி, அரக்கோணம் தொகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், சோளிங்கரில் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், காட்பாடி, ராணிப்பேட்டை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் தொகுதிகளுக்கு அந்தந்தப் பகுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.
இதுதவிர, ஆற்காடு தொகுதிக்கு மாவட்ட குற்ற ஆவணக் காப்பக துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், அணைக்கட்டு தொகுதிக்கு நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், கே.வி.குப்பத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு மாவட்ட குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மனு தாக்கல் செய்யலாம்
வேலூர் மாவட்டத்தில் அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட இடங்கள் வருமாறு:
அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ஆற்காடு, அணைக்கட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கு அப்பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், வேலூர், ராணிப்பேட்டை தொகுதிகளுக்கு அப்பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், கே.வி.குப்பம் தொகுதிக்கு அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், திருப்பத்தூர் தொகுதிக்கு உதவி ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்த முறையான தேர்தல் அறிவிக்கை, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments