கதறி அழும் பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோரே நடத்தி வைத்த திருமணம்
ராஜஸ்தான், ஏப்.21-
ராஜஸ்தானில் பச்சிளம் குழந்தைகளுக்கு, திருமணம் செய்து வைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
குழந்தை திருமணம் 2006ம் ஆண்டு குழந்தை திருமண சட்டத்தின் கீழ் இந்தியாவில் சட்டவிரோதமானது.
ஆனாலும், இந்தியாவில் குழந்தை திருமணம் இன்றளவும் ஆங்காங்கே
நடந்து கொண்டே தான் உள்ளது.குழந்தை திருமணம் 2006ம் ஆண்டு குழந்தை திருமண சட்டத்தின் கீழ் இந்தியாவில் சட்டவிரோதமானது.
ஆனாலும், இந்தியாவில் குழந்தை திருமணம் இன்றளவும் ஆங்காங்கே
இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தூர்கார் என்ற நகரத்தில் நடந்த குழந்தை திருமணம் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
திருமணம் என்ற வார்த்தை கூட தெரியாத அந்த பச்சிளம் குழந்தைகள், தங்களுக்கு நடப்பது என்ன என்று அறியாமல் பயத்தில் அழுதுள்ளனர்.
அந்த வீடியோவில், 12 வயது சிறுவனுக்கு 5 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த 5 வயது சிறுமி அழுவதை கூட பொருட்படுத்தாமல், திருமண சடங்குகளை நிகழ்த்தியுள்ளனர்.
சுமார் 2 நாட்களில் 6 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments
Thank you for your comments