மோடியின் மெழுகுச் சிலை தயார்
டெல்லி, ஏப்.21-
பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை மேடம் டுசாட்ஸ்
அருங்காட்சியக ஆட்கள் செய்து முடித்துள்ளனர். இதையடுத்து அந்த சிலையை
மோடிக்கு காண்பிக்கப்பட்டது. குர்தா, கருப்பு நிற ஷூ அணிந்து இருக்கும்
சிலையை பார்த்தால் மோடி தான் நிற்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு
அருமையாக உள்ளது.
சிலையை பார்த்த மோடியே அசந்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பிரம்ம தேவன்
சிலையை பார்த்த மோடி கூறுகையில், என்ன சொல்வது? கடவுள் பிரம்மா வழக்கமாக
செய்வது போன்று இந்த கலைஞர்கள் என் சிலையை செய்துள்ளனர் என்றார். மோடி
சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மோடியின் சிலை
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.
மோடி
ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் செய்ய முடியாததை மோடி ஜி மறுபடியும்
செய்துவிட்டார். அவர் மோடிஜியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்
என கவுசிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவுசிக்கை போன்று பலரும்
மோடியின் மெழுகுச் சிலை குறித்து விமர்சித்து வருகிறார்கள்.
மேடம் டுசாட்ஸ்
மேடம் டுசாட்ஸ் மோடிஜியின் சிலையை சரியாக செய்யவில்லை. வலது பக்கம் உள்ள
சிலை குள்ளமாகவும், நிறம் கம்மியாகவும் உள்ளது என்று சிரில் கிண்டல்
செய்துள்ளார்.
சிலை
கையில் பெயிண்ட், பிரஷ் வைத்துள்ளது தான் மெழுகுச் சிலையாக இருக்கும்.
உண்மையான மோடி கேமராவை பார்த்துக் கொண்டுள்ளார் என ஜாய் கூறியுள்ளார்.
பயணம்
தற்போது நாம் இரண்டு பேர் உள்ளோம். நான் உலகை சுற்றிப் பார்க்க செல்கையில்
நீ என் இடத்தில் வீட்டில் இரு, யாருக்கும் அடையாளம் தெரியாது என ஒருவர்
கிண்டலடித்துள்ளார்.
No comments
Thank you for your comments