நான் அவனில்லை : தேர்தல் ஆணையத்தை கலாய்த்த வைகோ
சென்னை, ஏப்.21-
சில வாரங்களுக்கு முன்பு, மக்கள் நலக்கூட்டனி
ஒருங்கிணைப்பாளர் வைகோ, சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, கருணாநிதி பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார்.எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வைகோவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், சங்கரன் கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ “தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், ஏப்ரல் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்; இல்லையெனில் என் சார்பில் ஒருவர் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில் கோபால்சாமி வைகோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டே நான் என் பெயரை வைகோ என்று மாற்றிவிட்டேன். அதுகூட தெரியாமல் தவறாக குறிப்பிட்டுள்ளார்கள். தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஒன்றை கூறு விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிடும் கோபால்சாமி வைகோ நான் அல்ல” என்று பேசினார்.
No comments
Thank you for your comments