பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்: அதிரடியாக கைது செய்த போலிஸ்
பிரேசில் நாட்டில் பெண் நீதிபதி ஒருவரை நெருப்பு வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
பிரேசில்
நாட்டில் ஸாவோ பாலோ நகரில் குடும்ப
தகராறு காரணமாக கைது செய்யப்பட்ட நபர்
மீதான வழக்கு ஒன்று நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடையை அந்த நபர் தம்மை குற்றமற்றவர் என விடுவிக்க
வலியுறுத்தி வழக்கை விசாரித்த பெண் நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதில் உடன்படாத பெண் நீதிபதி மீது ஆத்திரம் கொண்ட அந்த நபர்,
நீதிபதியின் அறையில் வைத்து தாம் எடுத்து வந்த எரிபொருளை நீதிபதி மீது
கொட்டியுள்ளார்.
பின்னர் நீதிபதியை தரையில் உருட்டி தள்ளிய அந்த நபர் அவரை நெருப்பு வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
நடந்த களவரங்களால் அதிர்ச்சியுற்ற நீதிபதி தம்மை விட்டுவிடுமாறு கேட்டு அந்த நபரிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தை கமெராவில் பதிவு செய்த அந்த நபர், தாம் நிரபராதி எனவும் தம்மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் நீதிபதியின் அறைக்குள் புகுந்த பொலிசார், அந்த நபர் மீது பாய்ந்து அவரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து தீ அணைப்பானை பயன்படுத்தி அந்த பெண் நீதிபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக வேறு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
No comments
Thank you for your comments