அன்னா ஹசாரே திடீர் சுகவீனம்... மருத்துவமனையில் அனுமதி
டெல்லி, ஏப்ரல் 01-
சமூக சேவகர் அன்னா ஹசாரே 78 வயதானவர். இவர் அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டில் அவர் இருந்தபோது நீரிழப்பு மற்றும் உடல் வெப்ப அதிகரிப்பு காரணமாக அவர் மயக்கம் அடைந்தார்.
அதனையடுத்து அஹமது நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. இந்நிலையில், அன்னா ஹசாரே சிறிது சோர்வடைந்து இருப்பதாகவும்,
உடலுக்கு எந்தக் கோளாறும் இல்லை என்றும் நெருக்கமான வட்டாரங்கள்
தெரிவித்தன.
No comments
Thank you for your comments