தர்மபுரி அருகே தண்டவாளத்தில் கிடந்த மர்மபொருட்கள்:ரயிலை கவிழ்க்க சதியா?
தர்மபுரி, ஏப்ரல் 04-
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகேயுள்ள
இவர் மொரப்பூர்– தொங்கனூர் இடையே ரயில்வே தண்டவாளத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஆவலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் இருந்து 5 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள், ரயில்வே ஊழியர் ராஜாவை கண்டதும் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தனர்.
இதைப் பார்த்து, சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர் ராஜா, சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தார். அப்போது அங்கு தண்டவாளத்தில் வெள்ளைநிற பவுடர் சிதறிக் கிடந்தது.
அத்துடன், மின் மோட்டாருக்கு பயன்படுத்தும் வயர் சுற்றப்பட்ட 4 கண்டன்சர் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன.
இவை வெடிபொருட்களாக இருக்கலாம் என்று கருதிய ராஜா, மொரப்பூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
இதையறிந்த ரயில்வே ஊழியர் உடனே தனது கையில் வைத்திருந்த சிவப்பு கொடியை சரக்கு ரயிலை நோக்கி காட்டினார்.
இதைப் பார்த்த சரக்கு ரயில் ஓட்டுநர்கள் ஏதோ அசம்பாவித சம்பவம் நடப்பதை உணர்ந்து அந்த சரக்கு ரெயிலை சுமார் 50 அடி தூரத்திலேயே நிறுத்தினர்.
இந்தநிலையில் சிறிது நேரத்தில் சேலம் ரயில்வே காவலர்கள், மொரப்பூர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஊழியர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பவுடர் மற்றும் வயருடன் கிடந்த 4 கண்டன்சர்களை ஆய்வு செய்தனர்.
அத்துடன், அந்த 4 கண்டன்சர்கைளில் பதிந்ருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த மர்ம பொருட்கள், வெடிபொருட்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், தண்டவாளத்தில் கிடந்த 4 கண்டன்சர்கள் மற்றும் சிதறி கிடந்த பவுடர், வயர் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
மேலும், மொரப்பூர் வழியாக சென்று வரும் ரயில்களை கவிழ்க்க தண்டவாளத்தில் பவுடர் மற்றும் வயர் சுற்றப்பட்ட குப்பிகளை வைத்து சதி நடந்ததா? என்பது தொடர்பான பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்த பொருட்களை தண்டவாளத்தில் வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்நேரம், மொரப்பூர் வழியாக வந்து செல்லும் 6 ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றது. ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments