டெல்லியில் இன்று முதல் கார் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வருகிறது
டெல்லி, ஏப்.15-
டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்ணில் முடியும் கார்களை ஓட்டுவதற்கான கட்டுப்பாடு இன்று மீண்டும் தொடங்குகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜனவரி மாதம் சோதனை ரீதியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் 2வது முறையாக மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை எண்களில் முடியும் கார்கள் அடுத்தடுத்த நாட்களில் இயக்கப்படும்.
கார் கட்டுப்பாடு திட்டத்தால் அதிகரிக்கும் பயணிகளின் நெரிசலை கருத்தில் கொண்டு வரும் 30ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மற்றும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளிச் சீருடையில் மாணவ, மாணவியர் இருக்கும் கார், பெண் ஓட்டுநர் உள்ள கார், டெல்லி மாநில அமைச்சர்கள் தவிர்த்த மற்ற விஐபிக்களை கொண்ட கார், சிஎன்ஜி எரிவாயு கார் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடிலிருந்து விலக்களிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments