Breaking News

நெடுஞ்சாலையில் வேகத் தடையை நீக்க முடிவு

இந்தியா, ஏப்.15-
இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையை அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய நெடுங்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடை காரணமாக பல விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் நெடுங்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகக் தடைகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வேகக் தடைகளை அப்புறப்படுத்துமாறு மாநில அரசாங்கங்களையும் தனியார் ஏஜென்சிகளையும் மத்திய அரசாங்கத்தின் சாலைவழி போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சில இடங்களில் தங்களின் வசதிக்காக பொதுமக்களே வேகத்தடை அமைத்துகொள்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments