திருச்சூர் பூரம் திருவிழாவில் வாண வேடிக்கைக்கு கேரள நீதிமன்றம் அனுமதி!
கேரளா, ஏப்.15-
நடைபெற்றுவரும் திருச்சூர் பூரம் திருவிழாவில் வாண வேடிக்கை நிகழ்த்த அணுமதி அளிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தை திருவம்பாடி தேவசம் போர்டு முறையிட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் அனு சிவராமன் அடங்கிய அமர்வு, பூரம் விழாவில், குறைந்த சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை பயன்படுத்த அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அனுமதி பெறாத ரசாயனங்களை பட்டாசில் பயன்படுத்த வேண்டாம் எனவும் மனு தாரர்களிடம் கேரள நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 11 ஆம் தேதி கொல்லம் அருகே உள்ள புட்டிங்கள் தேவி கோவிலில் நடைபெற்ற வாண வேடிக்கை நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 110 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 400-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments