Breaking News

நடிகர் கருணாஸ் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

சென்னை, ஏப்ரல் 04-
நடிகர் கருணாஸ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.


இந்நிலையில், இன்று அவர் முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, வரும் சட்டசபைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments