திருப்பத்தூர், ஏப்.18-

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புள்ளானேரி கிராமத்தில் சுமார் ஒருவருட காலமாக குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து சுமார் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுப்பட்டனர் மேலும்
அவ்வழியாக வந்த இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் லாரியும் சிறைபிடித்தனர் . தகவலறிந்து வந்த ஒன்றிய குழுத் தலைவர் ரமேஷை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கும் ஒன்றிய குழுத் தலைவர் ரமேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தகவலறிந்து வந்த ஜோலார் பேட்டை போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் . இதனால் அரை மணி நெரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments